சிறைச்­சாலையி­லி­ருந்து தப்பிச் சென்­ற­தாகக் கூறப்­படும் கைதி­யொ­ருவர் நீதி­மன்றில் குப்பை மேட்டில் வீழ்ந்து கிடந்த நிலையில் மீண்டும் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கிரி­எல்ல பிர­தே­சத்தில் வங்கி ஒன்றை கொள்­ளை­யிட முயன்­றமை தொடர்பில் இச்­சந்­தே­க­நபர் கடந்த 3 ஆம் திகதி நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது, தன் மீதான அனைத்து குற்­றச்­சாட்­டு­களையும் ஒப்­புக்­கொண்­டுள்ளார். 

அதன்­பின்னர், கைவிரல் அடை­யா­ளங்­களை பதிவு செய்­து­கொள்­வ­தற்­காக சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் அழைத்­து­ செல்­லப்­பட்­ட­போது, இவ்­வாறு தப்­பிச்­சென்று குப்பை கூளத்­தினுள் விழுந்­துள்ளார்.

அதன்­போது, அவர் மீண்டும் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது, 'கடவுள் எனது கனவில் தோன்றி, நீதி­மன்றை உடைக்­கு­மாறு கட்­ட­ளை­யிட்டார். நானும் அதனை செய்தேன். பின்னர் வங்­கியை கொள்­ளை­யி­டு­மாறு கடவுள் கூறினார். அத­னையும் செய்தேன். இன்று என்னை நீதி­மன்­றி­லி­ருந்து தப்­பிச்­செல்­லு­மாறு அவரே கட்­ட­ளை­யிட்டார்" எனக் கூறினார்.

மேற்­படி சந்­தே­க­நபர், கடந்த ஜுன் 17 ஆம் திகதி இரவு நேரத்தில் இரத்­தி­ன­புரி நீதி­மன்றின் சான்றுப் பொருட்கள் வைக்­கப்­பட்­டி­ருக்கும் அறையை உடைத்து சான்றுப் பொரு­ளான கஞ்­சாவை திரு­டிய சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வ­ராவார்.

அதன்­பின்னர், இவர் கிரி­எல்ல பிர­தே­சத்­தி­லுள்ள வங்கி ஒன்றை கொள்­ளை­யிடச் சென்­ற­போது, பிர­தே­ச­வா­சி­களால் மடக்­கிப்­பி­டிக்­கப்­பட்டு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்கப்பட்­டுள்ளார். 

இரத்­தி­ன­புரி, தம்­பு­லு­வத்த பிர­தே­சத்தைச் சேர்ந்த 33 வய­தான நப­ரொ­ரு­வரே இவ்­வாறு கைது­செய்­யப்­பட்­டுள்­ள­வ­ராவார்.

இத­னை­ய­டுத்து, அவர் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து, நீதி­மன்ற திருட்டு தொடர்பில் வாக்­கு­மூலம் பெற்­றுக்­கொள்­ளு­மாறு பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.