கடைக்குட்டி சிங்கம் குடும்பத்தை சேர்ந்த   தனுஸ்ரீ, தேஜ்  இக்குழந்தைகள் நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள் அல்ல. உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்கள் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த இக்குழந்தைகளை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

 சூப்பர் சிங்கர் குடும்பத்தை சேர்ந்த பாடகியான தனுஸ்ரீயிடம் "கடைகுட்டி சிங்கம்" படத்தில் நடித்து பற்றி கேட்ட போது, கடைக்குட்டி சிங்கம் படத்தின் படபிடிப்பு தளம் ஜாலியாகவே இருந்தது. எல்லோரும் என்னை அன்பாக பார்த்துக்கொண்டார்கள். 

சத்தியராஜ், கார்த்தி, சாயிஷா மற்றும் பிரியா எல்லோரும் அவங்க குடும்பத்து குழந்தைகளாக பார்த்துக்கொண்டார்கள். 

படபிடிப்பு தளத்தில் நான் சில நேரங்களில் பாடினேன், அதை பார்த்து எல்லோரும்  எனக்கு முத்தம் குடுத்தார்கள், ஆனால் இப்போதைக்கு  நடிப்பு தான் எனக்கு முதலில் முக்கியமானது. 

நடிப்பில் தான் இப்போது எனது முழு கவனமும் இருக்கிறது . கடைக்குட்டி சிங்கம் படபிடிப்பு காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடக்கும்.  

சில நேரங்களில் இரவு தாமதமாக முடியும், மீண்டும் காலை விரைவாக படபிடிப்பு தொடங்கும். படபிடிப்பு தளத்தில் யார் அதிகமாக குறும்பு பண்ணுவார்கள்? 

என்று கேட்டபோது நம்மை இடைமறித்து தன்னுடைய தம்பிதான் அதிக குறும்பு செய்வான் , நான்  எப்போதும் அமைதியாக தான் இருப்பேன் என தெரிவித்தார்.

இசையமைப்பாளர் D.இமான் தனுஸ்ரீயை வருங்காலங்களில் தன்னுடைய இசையில் பாடவைப்பதாக தெரிவித்தார். 

இந்த படத்தில் பாடாதது பற்றி தனக்கு வருத்தமில்லை என தெரிவித்தார் தனுஸ்ரீ.

 கடைசியாக நமக்கு "வா ஜிக்கி வா ஜிக்கி" பாடலை பாடி காண்பித்து கை தட்டல் வாங்கிய தனுஸ்ரீ தன்னை நன்றாக பாசத்தோடு கவனித்த சூர்யா, கார்த்தி மற்றும் பாண்டிராஜ்க்கு நன்றி தெரிவித்தார்.