விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி அவசியம் என தெரிவித்த கருத்திற்காக சிங்கள அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட சுவரொட்டிகள் விஜயகலாவை தமிழ் தலைவி என வர்ணித்துள்ளன.

தமிழ் மக்களிற்காக மகேஸ்வரன் அன்று உயிர் துறந்தார் இன்று தமிழ்தலைவி விஜயகலா பதவி துறந்தார் போன்ற வாசகங்களையும் சுவரொட்டிகளில் காணமுடிகின்றது.

விஜயகலாவிற்கு ஆதரவான இந்த சுவரொட்டிகளை யாழ் பஸ் நிலையம் உட்பட யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் காணமுடிகின்றது.