வவுனியாவில் பாடசாலை மாணவர்களினால் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று இடம்பெற்றது. 

வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய இவ் விழிப்புணர்வு பேரணியானது மன்னார் வீதியூடாக பட்டானீச்சூர் 5ஆம் ஒழுங்கையடிக்கு சென்று மீண்டும் மன்னார் வீதியூடாக குருமன்காடு சந்தியடிக்கு சென்று மீண்டும் மன்னார் வீதியூடாக  பாடசாலையை சென்றடைந்து நிறைவுற்றது.

இப் பேரணியில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் , வவுனியா நகரசபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், 500க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.