(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியை நிராகரிப்பதாயின் சீனாவிடமிருந்து தான் பணம் பெறவில்லை என்பதை சான்றிதழ்களினூடாக உறுதி செய்ய வேண்டும் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சபையில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிடம் பணம் பெறவில்லை என்றால் பாராளுமன்றத்தில் அதனை உறுதிசெய்து சான்றிதழ் வழங்க வேண்டும். எனினும் பிரபலமான தலைவர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷ தனது களுத்தை தானே அறுத்தக்கொள்ள முற்பட மாட்டார் என நான் நம்புகின்றேன்.

ஆகவே சீனாவிடம் இருந்து நிதி பெற்றமையை கணக்காய்வு செய்ய வேண்டும். பாராளுமன்றம் தனக்கு உரிய அதிகாரம் வழங்கினால் அந்த விவகாரத்தை தன்னால் கணக்காய்வு செய்ய முடியும் என கணக்காய்வாளர் அதிபதி என்னிடம் தெரிவித்தார். ஆகவே இவ்வாறான தேவைகளுக்காகவே கணக்காய்வு சட்டமூலத்தை நாம் கொண்டு வந்துள்ளோம் என்றார்.