பாக்குநீரிணை கடல் பகுதியில் மீன்பிடித்த இந்தியா, மண்டபம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

நேற்றுக்காலை மண்டபத்திலிருந்து தமது படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

 மண்டபத்திலிருந்து நேற்று காலை கச்சத்தீவு அருகே 250 படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் கருப்பையாவுக்கு சொந்தமான  படகில்  மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் கரை திரும்பவில்லை.

இதனால்  அவர்களை மண்டபம் கடலோர காவல்படையினர்  ஹெலிகொப்டர் மூலமாக தேடி வருகின்றனர். 

குறித்த  சம்பவம் தொடர்பில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.