(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி )

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் ஜனநாயகம் பலமடையவில்லை என ஒருபோதும் குற்றம் சுமத்த முடியாது. முன்னைய ஆட்சியிலும் மக்கள் சுதந்திரமாக இருந்தனர் என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று தேசிய கணக்காய்வு சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே அவர் இதனை சுட்டிக்காட்டினர். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியின் போது ஜனநாயகம் பறிக்கப்பட்டது என கூறுவது பொய்யான கருத்தாகும். நாம் எமது ஆட்சியில் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம். 

அந்த வகையில் ஜனநாயகத்தை பலப்படுத்த சட்ட திட்டங்கள் முன்னெடுக்க வேண்டும். இதில் அரச அதிகாரிகள் சரியாகவும் நேர்த்தியாகவும் பலமாகவும் செயற்பட வேண்டும். இவர்களை சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும். அதேபோல் தவறுகள் இடம்பெறும் இடத்தில் சட்ட  திட்டங்களை பலப்படுத்தி தடிக்கவும் வேண்டும். இதில் தேசிய கணக்காய்வு சட்டம் மிகவும் முக்கியமானதாகும். 

இப்போது தேசிய கணக்காய்வு சட்டமூலத்தை கொண்டுவந்து நிறைவேற்றுவது வரவேற்க்கத்தக்க விடயம். இந்த சட்டமூலத்தில் குறைபாடுகள் உள்ளன. ஆகவே அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து பலமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.