மன்னார் நுழைவாயிலிலுள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகழ்வுப்பணி இன்றுடன் 28 ஆவது நாட்களாக நடைபெற்றது.

இன்றைய பணியானது கடந்த ஓரிரு தினங்களாக நடைபெற்று வந்த அதாவது எற்கனவே இவ்விடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட முப்பது மண்டையோடுகள் மற்றும் முழு மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணியாகவே இடம்பெற்றது.

இதைவிட ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது தோண்டப்பட்டு வீதியில் குவிக்கப்பட்ட மணல் கும்பத்தை இவ்விடத்திலிருந்து அகற்றும் பணியாகவும் காணப்பட்டது.

அத்துடன் மேலும் இவ் அகழ்வு செய்யப்படும் இடத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆயத்த வேலைகளும் நடைபெற்றன.

மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரபாகரனின் மேற்பார்வையில் விஷேட சட்டவைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.எஸ்.ஏ.ராஐபக்ச தலைமையில் நடைபெறும் இவ் பணியானது இன்று மனித எலும்புக் கூடுகளை அப்புறப்படுத்தும் பணியில் கடந்த நாட்களை விட ஆளனி பற்றாக்குறையுடனே நடைபெற்றதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.