ஈரா­னிய பாரா­ளு­மன்றத் தேர்தல் இன்று ஆரம்பம்

Published By: Raam

26 Feb, 2016 | 07:45 AM
image

ஈரா­னிய பாரா­ளு­மன்றத் தேர்தல் இன்று வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­ப­மா­கி­றது.

மேற்­படி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்­தி­ருந்த வேட்­பா­ளர்­களில் ஐந்தில் ஒரு பங்­கினர் தேர்­த­லி­லி­ருந்து வாபஸ் பெற்­றுள்­ள னர்.

பாரா­ளு­மன்­றத்­துக்­கான 290 ஆச­னங்­க­ளுக்கு 4,844 பேர் போட்­டி­யி­டு­வ­தா­கவும் 1,385 வேட்­பா­ளர்கள் வாபஸ் பெற்­றுள்ள தா­கவும் உள்­துறை அமைச்சின் தேர்தல் தலை­மை­ய­கத்தைச் சேர்ந்த மொஹமட் ஹெபஸைன் மொகிம் தெரி­வித்தார்.

மேற்­படி வேட்­பா­ளர்­களின் தொகையில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளதை அந்­நாட்டு உள்­துறை அமைச்சர் அப்­டோல்­ரஸா ரஹ்­மானி பாஸ்லி உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தின் ஒவ்­வொரு ஆச­னங்­க­ளுக்கும் தற்­போது சுமார் 17 பேர் போட்­டி­யி­டு­கின்­றனர் என அவர் தெரி­வித்தார்.

மொத்த வேட்­பா­ளர்­களில் 10 சத­வீ­தத்­தி­ன­ராக பெண் வேட்­பா­ளர்கள் உள்­ளனர். சுமார் 100 பெண் வேட்­பா­ளர்கள் தேர்­த­லி­லி­ருந்து வாபஸ் பெற்­றுள்ள நிலையில் சுமார் 500 பெண் வேட்­பா­ளர்கள் இந்தத் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்­றனர்.

அர­சாங்க ஆத­ரவு வேட்­பா­ளர்­களில் ஜனா­தி­பதி ஹஸன் ரோவ்­ஹா­னியின் ஆத­ர­வா­ளர்­க­ளான சீர்­தி­ருத்­த­வா­தி­க ளும் பழை­மை­வா­தி­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

பிர­தான பழை­மை­வாத வேட்­பா ­ளர்கள் பட்­டி­யலில் முன்னாள் பாரா­ளு ­மன்ற சபா­நா­யகர் கோலம் அலி ஹட் டாட் அப்டெல் முன்­னி­லையில் உள்ளார். அவ­ரது மகள் அந்­நாட்டு உச்ச நிலைத் தலைவாரன ஆயத்துல்லாஹ் கமெய்னியின் மகன்­மாரில் ஒரு­வரைத் திரு­மணம் செய்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

தலை­ந­க­ருக்கு வெளி­யி­லான பெறு­பே­றுகள் தேர்தல் நிறை­வு­பெற்று 24 மணி நேரத்தில் வெளி­யா­கலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ஆனால் தலை­ந­க­ரி­லான தேர்தல் பெறு­பே­றுகள் வெளி­வ­ரு­வ­தற்கு 3 நாட்கள் வரை செல்­லலாம் என எதிர்­வு ­கூ­ரப்­ப­டு­கி­றது.

தலை­ந­கரில் 30 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை 12 மில்­லியன் மக்கள் தெரி­வு­செய்­ய­வுள்­ளனர்.

அத்துடன் ஈரானின் அடுத்த உச்சநிலைத் தலைவரை தெரிவுசெய்யவுள்ள அதி அதிகாரத்துவம் பொருந்திய நிபுணத்துவ சபைக்கான 88 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பும் முதல் தடவையாக ஒரேதினத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10