(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி )

தேசிய கணக்காய்வு சட்டமூலத்தைக் கொண்டு வருவதாகக் கூறி செயலாளர்களுக்கான சட்டமூலமொன்றையே அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற சுனில் ஹந்துநெத்தி குற்றஞ்சாட்டினார். 

பாராளுமன்றத்தில் இன்று தேசிய கணக்காய்வு சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில். 

அரசாங்கம் காலம் கடத்தி கொண்டு வந்துள்ள தேசிய கணக்காய்வு சட்டத்தினூடாக பாரிய மோசடிகள் தடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. அத்துடன் கணக்காய்வு சட்டமூலத்துக்கு அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் திருத்தங்கள் இதனை மேலும் பலவீனமாக்குவதுடன் கணக்காய்வாளர் நாயகத்துக்குக் காணப்படும் அதிகாரங்களையும் குறைக்கும் வகையிலும் இது அமைந்துள்ளது.

அரசாங்கம் தேசிய கணக்காய்வு சட்டமூலமொன்றை நிறைவேற்றியுள்ளோம் எனக் காண்பிப்பதற்கே இவ்வாறானதொரு சட்ட மூலத்தை கொண்டுவந்துள்ளது. இதனை கணக்காய்வு சட்டமாக ஏற்றுக் கொள்ள முடியாது செயலாளர்களுக்கான சட்டமாகவே கருத வேண்டும் என்றார்.