குளியாப்பிட்டிய பகுதியல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த பாடசாலை வேனானது எதிரே வந்த சிறியரக லொறியொன்றுடன் மோதியதனாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

அத்துடன் விபத்தின் காரணாக காயமடைந்த மூன்று பாடசாலை மாணவர்களும் வேனின் சாரதியும் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.