கொலன்னாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவத்தை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவத்தின் போது தாக்குதல் தாரிகள் இரு முச்சக்கர வண்டிகளை தீயிட்டு எரித்துள்ளதாகவும் சம்பவத்தில் காயமடைந்த இரு இளைஞர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.