சிறுவர் பாதுகாப்பினை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Published By: Daya

05 Jul, 2018 | 12:57 PM
image

  (எம்.மனோசித்ரா)

சிறுவர் நன்னடத்தை பிரிவு மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை என்பன துஷ்பிரயோகம் செய்பவர்களிடத்திலேயே சிறுவர்களை மீண்டும் தள்ளிவிட முயற்சி செய்வதாகவும், இவ்வாறான செயற்பாடுகளில் அரச நிறுவனங்கள் கொண்டிருக்கும் செயலற்ற நிலையினை கண்டிப்பதாகவும் தெரிவித்து சமூக நீதிக்கான வெகுசன அமைப்பு ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.

நுகேகொட நீதிமன்றத்திற்கு முன்னதாக நேற்று  அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,

எமது நாட்டில் இயங்கிவரும் சில சிறுவர் இல்லங்கள் பற்றிய தகவல்கள் சிறுவர் நன்னடத்தை பிரிவு மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை என்பவற்றுக்கு வழங்கப்பட்டிருந்தும், மீண்டும் அவற்றுக்கு சிறுவர்களை அனுப்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்க விடயமாகும்.

இதே வேளை இவ்வாறான விடயங்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்விசாரணைகளின் போது பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மனநலம் குறைந்தவர்களாகக் காண்பிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டும் நடவடிக்கையையே நீதிமன்றத்தில் தொடர்ந்தும் செய்து வருகின்றனர்.

சிறுவர்கள் வாழ்வதற்கு பொறுத்தமற்றது என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் அடையாளம் காணப்பட்ட சிறுவர் இல்லங்களுக்கு சிறுவர்களை அனுப்புதவற்கு அச் சபையே தற்போது அனுமதியினையும் வழங்கி வருகின்றது.

இதே வேளை சிறுவர்களுக்கு பொறுத்தமான அரச பாடசாலைகளை கண்டறியுமாறு நன்னடத்தை பிரிவுக்கு நீதிமன்றம் கோரிக்கை விடுத்திருத்திருந்து போதிலும் அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47