(எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் கொலையே என தெளிவாவதால் அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. 

குறித்த கொலை சம்பவத்துடன் ஏதேனும் ஒரு வகையில் எவரேனும் தொடர்பு பட்டிருந்தால் அத்தகைய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு  கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் உத்தரவு பிறப்பித்தார்.