' TelcoNext – ஒன்றிணைந்து, டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுவூட்டுவோம்' என்ற கருப்பொருளிலான அறிவு பகிர்வு நிகழ்ச்சி ஊடாக உலகளாவிய அளவில் வளர்ந்து வரும் தலைப்பான டிஜிட்டல் பொருளாதாரத்தை சிறிலங்கா டெலிகொம் வெற்றிகரமாக வழங்கியுள்ளது.

கொழும்பு சினமன் லேக்சைட்டில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்ச்சி IT, BPO, BPM, அரச துறையினர் அதேபோன்று இலங்கையின் கல்வியாளர்கள் என பெரும் எண்ணிக்கையிலான ஆர்வமுள்ள தொழில்முறையாளர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.  

இந்த நிகழ்ச்சியில் உலகளாவிய போக்குடனான 'டிஜிட்டல் பொருளாதாரம்',  டிஜிட்டல் சிறிலங்கா முயற்சிகள். IoT செயற்படுத்தல், உயர் இணைப்பு, டிஜிட்டல் சேவைகள், போட்டியாளர் நடத்தை, எதிர்கால கோரிக்கைகளை எதிர்கொள்ள ஒபரேட்டர்களை மென்பொருளாக்கல் மற்றும் மெய்நிகராக்கல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உரைகள் இடம்பெற்றன.  

டிஜிட்டல் பொருளாதாரத்தின் முதுகெலும்பான தகவல் தொடர்பாடல் தொழ்நுட்ப (ICT) உட்கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்கும் இலங்கையில் மின் வணிக சந்தையை மேம்படுத்தி விரிவுப்படுத்துவதற்கும் ஸ்ரீ லங்க டெலிகொம் மற்றும் மொபிடெல் வாக்குறுதி அளித்துள்ளன.   

இந்த அமர்வில் முக்கிய உரையாற்றிய பொறியிலாளர் அனுராத உடுனுவர கூறியதாவது, 'இந்த வெற்றிகரமான ஆரம்பத்திற்கு காரணம் நாட்டின் இயக்குபவர்கள் மூலம் நவீன ICT உட்கட்டமைப்பு மற்றும் தளம் ஏற்கெனவே கட்டி எழுப்பப்பட்டதாகும். அது டிஜிட்டல் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும்.

 மறுபுறம் இயக்குபவர்கள் தமது சம்பிரதாய வர்த்தகங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஆரம்பிக்க வேண்டியதில்லை மற்றும் இயக்குபவர்கள் போட்டியிடும் உத்தியாக தமது நீண்டகால வர்த்தகங்களை இணைக்க முடியும்' என்றார். 

பொறியிலாளர் அனுராத உடுனுவர ஹேர்ட்போர்ஷயர் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சிய பொதுநலவாய தொலைத்தொடர்புகள் அமைப்பின் வருகை விரிவுரையாளராகவும், பேராதனை பல்கலைக்கழகத்தின் சிறப்பு விரிவுரையாளராகவும் ஒரு மூத்த தொலைத்தொடர்புகள் நிபுணராகவும் உள்ளார். உரையாளர் குழுவில் பொறியியலாளர் ரசன்த ஹெட்டிதன்திரிகே, மொபிடெலின் பொறியலாளர் மற்றும் நடவடிக்கைகள் சிரேஷ்ட முகாமையாளர் மற்றும் மதிப்பீட்டாளராக இருக்கும் கலாநிதி ஷாமில் அப்பாத்துறை, அவர் ஸ்ரீ லங்கா டெலிகொம் கல்லூரி (SLTC) விரிவுரையாளர் மற்றும் ஆலோசகராக இருப்பதோடு மொபிடெல் வலையமைப்பு வியூகம் மற்றும் உருமாற்ற பிரிவின் தலைவராகவும் உள்ளார்.    

தேசிய தகவல் தொடர்பாடல் தொழ்நுட்ப வழங்குனராக SLT, இலங்கையில் அறிவு பகிர்வு நிகழ்ச்சி மூலம் மின் வணிக சந்தையை மேம்படுத்தி விரிவுபடுத்துவதற்கு புதிய தலைப்புகளை ' TelcoNext ' அமர்வுகளில் கொண்டுவருகிறது. 

நாட்டின் பொருளாதாராத்தின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதற்கு ICT/ டிஜிட்டல் கட்டமைப்பை அணுகல் முக்கியமானதாகும். 2018ஆம் ஆண்டில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் சேவைகள் மற்றும் இணைய விடயங்களின் ஒருங்கிணைப்பை வளர்ச்சியை தொடர்ச்சியாக காண முடியும். 

கடலுக்கடியிலான கேபிள்கள் மற்றும் 4.5G வெளியீடு மற்றும் பைபர் ஒப்டிக் பிரோட்பாண்ட் சேவைகள் ஊடே இலங்கையை சர்வதேசத்துடன் தொடர்புபடுத்தி தகவல் தொடர்பாடல் தொழ்நுட்ப துறையை வலுப்பெறச் செய்கிறது. 

அதிக போட்டி கொண்ட சூழல் காரணமாக பரந்த இணைப்பு, அதிக வேகம் மற்றும் குறைந்த கட்டணம் ஆகிய வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு நன்மை தருவதோடு நாட்டை டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்லும்.

நவீன உலகில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு டிஜிட்டல் மாற்றம் ஒரு முக்கிய கருவியாக உள்ளது. டிஜிட்டல் சந்தை, ஒரு உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரமாக அபிவிருத்தி அடைந்து வருகிறது.  

டிஜிட்டல் மயமாகுதல் வாழ்க்கைத்தரம் மற்றும் சமூக நலனை மேம்படுத்துவதாக உள்ளது. தொலைத்தொடர்புத்துறை உலக டிஜிட்டல்மயமாதலின் இதயமாக செயற்படுவதோடு அது டிஜிட்டல் பொருளாதாரத்தை செயற்படுத்த முக்கிய தொடர்பாடல் கட்டமைப்பை வழங்குகிறது.