அரசாங்கத்திற்கு இடைஞ்சலின்றி அமைச்சுப் பதவியிலிருந்து விலக விஜயகலா தீர்மானம் 

Published By: Priyatharshan

05 Jul, 2018 | 09:27 AM
image

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சுப்பதவியில் இருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தான் தனது தவறை உணர்வதாகவும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் தமது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

நான் எனது தவறை ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஏனெனில் நான் பெற்றுக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்கு அமைய நான் தெரிவித்த கருத்து முரணானது.

விடுதலைப்புலிகள் அமைப்பு தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. எனக்கு கட்சித் தலைவரோ அல்லது அரசாங்கமோ அறிவிக்க முன்னர்  இது குறித்து முடிவை எடுத்துள்ளேன்.

என்னுடன் கட்சியின் தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமை தொடர்புகொண்ட போது, எனக்குத் தெரியும் நான் எந்த இடத்தில் பிழைவிட்டுள்ளேன் என்று. இந்த அரசாங்கத்தில் நான் பொறுப்புள்ள அமைச்சராக இருந்துகொண்டு நான் இப்படியொரு கருத்தை தெரிவித்த வேளை நான் என்ன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் எனக்குத் தெரியும்.

 அந்தவகையில் நான் உடனடியாக கட்சியின் தலைவருக்கு கூறியிருந்தேன் நான் என்னுடைய பொறுப்பிலிருந்து மீறிவிட்டேன். ஆகையால் நீங்கள் நடவடிக்கை எடுத்து விசாரணை செய்யும் வரையும் நான் தற்காலிகமாக எனது பொறுப்பிலிருந்து உடனடியாக இராஜிநாமா செய்கின்றேன் என்று.

இந்நிலையில் எனது கட்சியின் தலைமைப்பீடம் நான் உடனடியான இராஜிநாமா செய்வதற்கு இடமளிக்கவில்லை. 

இதனால் நான் உடனடியாக கொழும்புக்கு சென்று கட்சித் தலைவருடன் நேரடியாக தொடர்பு கொண்டேன். நேரடியாகவும் எனது நிலைப்பாட்டை அவரிடம் தெரிவித்துள்ளேன். 

நான் இன்றோ அல்லது நாளைக்கோ அதற்குரிய நடவடிக்கை எடுத்து அவர்களின் செயற்பாடுகளுக்கு இடைஞ்சலேற்படுத்தா வண்ணம் அவர்கள் அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கு நானும் என் சார்பில் பொறுப்பான முடிவை எடுத்துள்ளேன். அந்த முடிவுக்கு இணங்க இந்த அரசாங்கம் எங்களையும் இதிலிருந்து காப்பாற்ற வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16