விஜயகலா குறித்து கொந்தளிப்பவர்கள் ஹிட்லர் விடயத்தில் அமைதிகாப்பது ஏன்?

Published By: Vishnu

05 Jul, 2018 | 09:20 AM
image

(ரொபட்  அன்டனி)

புலிகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை  அரசாங்கத்தினால் எடுக்கப்படும். இது தொடர்பில் விசாரணை  நடத்தப்பட்ட பின்னரே  தேவையான நடவடிக்கை  எடுக்கப்படும்.  இதுகுறித்து யாரும் அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சா­ளரும்  அமைச்­ச­ரு­மான  ராஜித சேனா­ரட்ன தெரிவித்துள்ளார்.

நாங்கள்  ஹிட்­லரை ஊக்­கு­விப்­ப­தையும் நிரா­க­ரிக்­கின்றோம்.பிர­பா­க­ரனை ஊக்­கு­விப்­ப­தையும் நிரா­க­ரிக்­கின்றோம். ஆனால் தென்­னி­லங்­கையில் சிலர் பிர­பா­கரன் குறித்து  விஜ­ய­கலா பேசி­யதும் கொந்­த­ளிக்­கின்ற அதே­வேளை  ஹிட்லர் குறித்து பேசி­யமை தொடர்பில் கொந்­த­ளிக்­காமல் இருக்­கின்­றமை ஆச்­ச­ரி­ய­ம­ளிக்­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார். 

பாரா­ளு­மன்றக் கட்­ட­டத்­தொ­கு­தியில்  நேற்று நடை­பெற்ற  வாராந்த  அமைச்­ச­ரவை  முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் ஊட­க­வி­ய­லாளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்வாறு குறிப்­பிட்டார். 

அமைச்­ச­ரவை பேச்­சாளர்  அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்;

கேள்வி:  விஜ­ய­கலா மகேஸ்­வரன்  புலி­களை மீள உரு­வாக்­க­வேண்டும் என்று  கூறி­யுள்­ள­மை­யினால் தென்­னி­லங்­கையில் பாரிய கொந்­த­ளிப்பு ஏற்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இது தொடர்பில் ஏன்  எந்த அறி­விப்பும் வெளி­யி­டாமல் இருக்­கின்­றனர்.?

பதில்: உங்­க­ளது அவ­ச­ரத்­திற்­காக எதுவும் செய்ய முடி­யாது. விஜ­ய­க­லாவின் கூற்­றுத்­தொ­டர்பில் முழு­மை­யான விசா­ரணை நடத்­தப்­படும் அவரின் பேச்சு உள்­ள­டங்­கிய   இரு­வட்டை கொண்­டு­வந்து விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும். அதன்­பின்னர்   அர­சாங்கம் தேவை­யான நட­வ­டிக்கை எடுக்கும். குறிப்­பாக இந்த விட­யத்தில்  விஜ­ய­கலா மகேஸ்­வரன்   விதி­மு­றை­க­ளுக்கு அப்பால் சென்­றுள்­ளமை  தெரி­கின்­றது. எனவே இது­தொ­டர்பில் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் அந்த விட­யத்தில்   அர­சாங்கம் உரிய நேரத்தில் சரி­யான நட­வ­டிக்கை எடுக்கும். 

கேள்வி: விஜ­ய­கலா மகேஸ்­வரன்  உரை நிகழ்த்தி 72 மணி­நேரம் ஆகி­விட்­டது.எனினும் இது­வரை   இன்னும் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்­லையே?

பதில்: 72 மணி­நேரம் (நேற்­றைக்கு) இன்னும் ஆக­வில்லை.  அது­மட்­டு­மின்றி செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் ஐக்­கிய தேசி­யக்­ கட்சி உறுப்­பி­னரே  இது­தொ­டர்பில் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.  அதன் பின்­னரே  கூட்டு எதி­ர­ணி­யினர் மிகவும் அநா­க­ரி­க­மான முறையில்   இந்தப் பிரச்­சி­னையை எழுப்பி சபா­நா­ய­க­ர­ரையும்   தகா­த­மு­றையில் விமர்­சித்து  செயற்­பட்­டி­ருந்­தனர்.  ஆனால் சபா­நா­யகர்  தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தாக  அறி­வித்­தி­ருந்தார். அது­மட்­டு­மின்றி சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னை­யையும்  சபா­நா­யகர் எடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்ளார்.பிர­த­மரும் இது தொடர்பில் அவ­தானம் செலுத்­தி­யுள்ளார். அவர் இன்று (நேற்று) பாரா­ளு­மன்­றத்தில்   இது­தொ­டர்பில் ஒரு விசேட கூற்றை வெளி­யி­டு­வ­தற்கு ஏற்­பா­டா­கி­யுள்­ளது. 

கேள்வி: விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனை தற்­கா­லி­க­மாக பத­வி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­து­மாறு

பிர­தமர் ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தாரா?

பதில்: அது­பற்றி எங்­க­ளுக்குத் தெரி­யாது.  

கேள்வி: இந்த விவ­கா­ரத்தில் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனை அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்க முடி­யுமா?

பதில்:  அதற்கு முதலில் அந்த உரையை முழு­மை­யாக கேட்­க­வேண்டும். விசா­ரணை நடத்­த­வேண்டும்.  அதன் பின்­னரே  முடிவை அறி­விக்க முடியும்.  அமைச்சுப் பத­வியில் இருந்து நீக்க முடி­யுமா இல்­லையா என்­பதை சட்­டமா அதி­பரே அறி­விக்­க­வேண்டும். 

கேள்வி:  இது­தொ­டர்பில் அமைச்சர்  ராஜித சேனா­ரட்­னவின் கருத்து என்ன?

பதில்:  விஜ­ய­கலா மகேஸ்­வரன்  அவ்­வாறு பேசி­யமை தவ­றா­ன­தாகும். அதில்  மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை. அதே­போன்று தென்­னி­லங்­கையில் ஹிட்லர் தொடர்பில் பேசி­யதும் தவ­றாகும். அத­னையும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.  

கேள்வி:அர­சாங்கம் நல்­லி­ணக்­கத்­திற்கு முக்­கி­யத்­துவம் அளித்து செயற்­ப­டு­கின்­றது. 

எனினும் அர­சாங்­கத்தின் இரா­ஜாங்க அமைச் சர் இவ்­வாறு உரை­யாற்­று­கிறார். அப்­ப­டி­யா யின்  அர­சாங்­கத்­திற்குள் நல்­லி­ணக்கம் இல்­லையா?

பதில்: அர­சாங்­கத்­திற்குள் நல்­லி­ணக்கம் இருக்­கின்­றது. ஆனால் சர்­வா­தி­காரம் இல்லை.  பழைய நிறை­வேற்று  ஜனா­தி­பதி  முறை­மையும் தற்­போது இல்லை.  ஜனா­தி­பதி அன்று  செயற்­பட்­டது போன்று இன்­றைய ஜனா­தி­பதி செயற்­பட முடி­யாது. அது­மட்­டு­மின்றி கடந்த காலத்தைப் போலன்றி தற்­போது  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜன­நா­ய­க­மாக  பேசு­கின்­றனர்.   

கேள்வி: வடக்கு, கிழக்­கிற்கு எது­வுமே அர­சாங்கம் செய்­ய­வில்லை என  விஜ­ய­கலா மகேஸ்­வரன் கூறு­வது சரியா?

பதில்:  அவர்  வடக்­கிற்கு எது­வுமே  செய்­ய­வில்லை என்று கூற­வில்லை,  குறிப்­பாக காணி விடு­விப்பு தொடர்பில்  விஜ­ய­கலா நன்றி தெரி­வித்­தி­ருந்தார்.  ஆனால் வீட்­டுத்­திட்டம் அங்கு இன்னும் நிறை­வு­பெ­ற­வில்லை. அர­சாங்கம்  இரும்­பி­லான  வீட்­டுத்­திட்­டத்தை முன்­னெ­டுக்க முயற்­சித்த போது  அதனை கூட்­ட­மைப்பு எதிர்த்­தது. அவர்கள் கொங்­கீறீட் வீடு­களை கேட்­கின்­றனர். அது மிகவும் பழை­மை­யா­ன­தாகும். அதே­போன்று அர­சியல் கைதி­க­ளுக்கு இன்னும் விடு­தலை கிடைக்­க­வில்லை. அர­சியல் கைதிகள் விட­யத்தில் ஒன்று சட்­ட­ ந­ட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்;அல்­லது  விடு­விக்­க­வேண்டும். இவ்­வாறு வடக்கில் பல பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன என்­பதை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். அதனால் மன­நிலை தாக்கம் வரலாம்.   அவ்­வாறு   மன­நி­லையில் தாக்கம் வரு­கின்­றது என்­ப­தற்­காக இவ்­வாறு பேச முடி­யாது. இத­னைக்­கூறி    இந்தக் கூற்றை நியா­யப்­ப­டுத்த  முடி­யாது. 

கேள்வி: வடக்கில் குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் தெற்­கி லும் குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்­துள்­ள­னவே?

பதில்: இல்லை.அது அவ்­வா­றில்லை.  நான்  இங்கு சில புள்­ளி­வி­ப­ரங்­களை குறிப்­பி­ட­வுள்ளேன்.2014 ஆம் ஆண்டில் 57ஆயிரம் குற்­றச்­செ­யல்கள்  இடம்­பெற்­றுள்­ளன. 2017ஆம் ஆண்டு 35700 குற்­றச்­செ­யல்­களே இடம்­பெற்­றுள்­ளன.  ஆனால் போதைப்­பொருள்  சம்­ப­வங்கள்  அதி­க­ரித்­துள்­ளன. 

கேள்வி: எனினும்  விஜ­ய­கலா மகேஸ்­வரன்  குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்­துள்­ள­தாக கூறு­கி­றாரே? 

பதில்: வடக்கில் நிலைமை சற்று மோச­மா­கத்தான் உள்­ளது.  

கேள்வி: விஜ­ய­கலா இவ்­வாறு பேசி­யது சரியா?

பதில்: இல்லை. அது தவ­றா­னது. குறிப்­பாக   பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்­டங்கள் உள்­ளிட்ட

இடங்­களில் அவர் தமது ஆதங்­கங்­களை தெரி­விக்­கலாம்.  அவர் ஏற்­க­னவே இவ்­வாறு சில இடங்­களில் கருத்து வெளி­யிட்­டி­ருக்­கின்றார். நான் இல்லை என்று கூற­வில்லை.  ஆனால் இன்னும்  சற்று  அதி­க­மாக தமது ஆதங்­கங்­களை    பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்­டங்­களில் முன்­வைக்­கலாம்.  

கேள்வி: புலிகள் காலத்தில்    குற்­றச்­செ­யல்கள் இடம்­பெ­ற­வில்லை என   விஜ­ய­கலா கூறி­யுள்­ளமை  சரியா?

பதில்: அது ஒரு­வ­கையில் சரி­யா­கத்தான் இருக்­கின்­றது. அதா­வது  புலிகள் காலத்தில்  அனைத்து குற்­றச்­செ­யல்­க­ளையும் புலி­களே செய்­தனர். ஏனை­ய­வர்கள்   பயத்தில் எத­னையும் செய்­ய­வில்லை. அதனால்   அந்த நிலைமை   இருந்­தி­ருக்­கலாம். ஆனால் தற்­போது அந்த நிலை இல்லை. மக்­க­ளுக்கு சுதந்­திரம் இருக்­கின்­றது. சுதந்­திரம் இருக்­கின்­ற­போது  குற்­றச்­செ­யல்­களும் அதி­க­ரிக்கும். 

கேள்வி: விக்­கி­னேஸ்­வரன் ,சிவா­ஜி­லிங்கம் உள்­ளிட்­டோரின்  இந்த இன­வாத செயற்­பா­டுகள் தொடர்­கின்­ற­னவே?

பதில்: ஆனால்  விக்­கி­னேஸ்­வரன் சிவா­ஜி­லிங்கம் போன்­றோரை  மக்கள் அங்­கீ­க­ரிக்­கின்­ற­னரா என்று பார்க்­க­வேண்டும்.  நந்­திக்­கடல்  பகு­தியில் அஞ்­சலி செலுத்த சிவா­ஜி­லிங்கம் மற்றும் விக்­கி­னேஸ்­வ­ர­னுடன் 100 பேர்­ வ­ரையில்  மக்கள்  வந்­தி­ருந்­தனர்.  அவ்­வாறு வந்­த­வர்­க­ளுக்கு  அங்­குள்ள இரா­ணு­வ­மு­காமில் குளிர்­பானம் வழங்­கப்­பட்­டது.இதுதான் உண்மை நிலைமை. 

கேள்வி: எப்­ப­டி­யி­ருந்தும் இது­வரை  விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­காமல் இருப்­பது சரியா?

பதில்: அவ­ச­ரப்­ப­டாமல் இருங்கள்,  அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும்.  

கேள்வி: இவ்வாறான ஒரு கருத்தை  வெளியிட்டுவிட்டு விஜயகலா அரசாங்கத்தில் நீடிக்க முடியுமா?

பதில்:  நாம் இதுதொடர்பில் கடுமையான நடவடிக்கை  எடுப்போம்.  

கேள்வி: யாழில்  ஒருகோவில் திருவிழாநிகழ்வில்  ஈழக்கொடி கொண்டுசெல்லப்பட் டுள்ளது.   இது சரியா?

பதில்:  சம்பந்தப்பட்டவர் கைதுசெய்யப் பட்டுள்ளார்.  அதுமட்டுமின்றி 30 வருடம் யுத்தம் நடைபெற்ற ஒரு பகுதியில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவது சகஜமாகும்.  தெற்கில் ஹிட்லர் தொடர்பிலும் பேசியுள்ளனர் தானே, அதனை ஏன் தூக்கிப்பிடிக்கவில்லை.தமிழர் என்ற காரணத்திற்காக எதையாவது கூறிவிட்டால் அதற்காக   இவ்வாறு செயற்படுவது  சரியா? புலிகளை ஊக்குவிப்பதும் தவறு ஹிட்லரை ஊக்குவிப்பதும் தவறுதான்.  ஆனால் இன்று தமிழ் மக்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இருக்கின்றனர் என்பதில் நாம் மகிழ்ச்சியடையவேண்டும்.தமிழ் அரசியல்வாதிகள்   இனவாதம் பேசினால் மக்களே எதிர்ப்பார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48