காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்தினால் பல நன்மைகள் கிடைக்கின்றன. 

இரவு உணவை எப்போதும் குறைவாக உட்கொள்ள வேண்டும். ஆனால் பலர் கண்ட உணவுகளையும் இரவில் உட்கொள்கிறார்கள். இதனால் காலையில் அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. 

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் காலையில் வெந்நீர் அருந்தினால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். மேலும் காலை உணவிற்கு முன்னர் சிறிது வெந்நீர் அருந்தினால் செரிமானம் சிறப்பாக இருக்கும். 

மாதவிடாய் காலங்களில் வயிறு வலி அதிகமாக இருக்கும் போது, வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்தினால் வலி சற்று மந்தப்படும். காலை வெறும் வயிற்றில் வெந்நீரோடு இஞ்சி அல்லது துளசியை கலந்து உண்டால், செரிமானம் மேம்படுவதோடு இளமையான தோற்றம் கிடைக்கும்.