(ரொபட் அன்டனி)

அடுத்த வருடத்திற்குள் வடக்கு, கிழக்கில் 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை  எடுக்­கப்­பட்­டுள்­ளதாக இணை அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்­துள்ளார். 

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

வடக்கு, கிழக்கில் 2018 ஆம் ஆண்டு 15 ஆயிரம் வீடு­க­ளையும் 2019 ஆம் ஆண்டில் 10 ஆயிரம் வீடு­க­ளையும் நிர்­மா­ணிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்­காக  அமைச்­ச­ர­வை­யினால் நிய­மிக்­கப்­பட்ட இரண்டு குழுக்­களின் பரிந்­து­ரை­களின் பிர­காரம் ஒரு­ வீட்டை  1.25 மில்­லியன் ரூபா செலவில் நிர்­மா­ணிக்க  நட­வ­டிக்கை  எடுக்­கப்­பட்­டுள்­ளது. 

இதற்­காக   ஐக்­கி­ய­ நா­டுகள்  திட்டம் தொடர்­பி­லான அலு­வ­லகம் மற்றும் ஐ.நா.மனி­த­வள  வீட­மைப்பு வேலைத்­திட்டம் குறித்த நிறு­வ­னத்­துடன்  உடன்­ப­டிக்­கைகள் செய்­து­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.இது தொடர்பில்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.