ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அறநெறி கட்டாயம் அவசியம்: அ. உமா மகேஸ்வரன்

Published By: Raam

25 Feb, 2016 | 07:02 PM
image

அறநெறியின் மூலம் ஒரு மனிதனை நல்ல பண்புகளை கொண்ட மனிதனாக மாற்ற முடியும். சிறைத்தண்டனைக்குட்பட்ட நபர் ஒருவரை கூட அறநெறியால் சீர்படுத்த முடியும். எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு கட்டாயம் அறநெறி கல்வியை பெற்று கொடுக்க வேண்டும் என இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமா மகேஸ்வரன் கருத்து தெரிவித்தார்.

இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு  நேற்று மாலை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமா மகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா முதல்முறையாக நடைப்பெறவிருக்கும் அதேவேளை இலங்கையின் 22 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட உள்ளனர்.

இந்நிகழ்வில் புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அறநெறி மற்றும் இந்துபண்பாட்டு நிதியம் ஆகியவற்றின் உறுப்பினரும் அறநெறி பாடசாலையின் ஆலோகசரும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருமான எஸ். தில்லைநடராசா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04