ரொகிங்யாக்களின் அகதி முகாம்களில் மர்ம படுகொலைகள்

Published By: Rajeeban

04 Jul, 2018 | 10:34 PM
image

மியன்மாரிலிருந்து இடம்பெயர்ந்த ரொகிங்யா அகதிகள் பங்களாதேசில் தங்கியுள்ள முகாம்களில் இடம்பெறும் மர்மக்கொலைகள் காரணமாக அகதிகள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 20 பேர்வரை அகதிமுகாம்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலர்  சமூகதலைவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நள்ளிரவில் கத்தி துப்பாக்கி போன்றவற்றை பயன்படுத்தி இனந்தெரியாத நபர்கள் சிலர் இந்த கொலைகளில் ஈடுபடுகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை தொடர்ந்து அகதிகளிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக பங்களாதேஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முகாமில் உள்ள அகதிகளிற்கான தலைவராக நியமிக்கப்பட்ட 35 வயது அரிபுல்லா என்பவர் கடந்த மாதம் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இனந்தெரியாத நபர்கள் அவரை சுற்றிவளைத்து 25 தடவைகள் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர்.

கொல்லப்பட்ட நபர் ஆங்கிலத்தில்உரையாற்றக்கூடியவர் சர்வதேச மனிதநேய அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியவர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் இந்த கொலை தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கொல்லப்பட்டவரின் மனைவி தனது கணவர் ரொகிங்யாக்களின் முக்கிய கிளர்ச்சிக்குழுவை விமர்சித்து வந்தவர் என தெரிவித்துள்ளார்.

எனினும் கிளர்ச்சிக்குழுவினர் தாங்கள் இவ்வாறான கொலைகளில் ஈடுபடவில்லை தங்களிற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேறு குழுக்களை சேர்ந்தவர்கள் இதனை செய்கின்றனர் என தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47