(நா.தினுஷா) 

விஜயகலா மகேஸ்வரன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை முன்னிறுத்தி எதிர்தரப்பினர் பாராளுமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றமையானது பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணானது என அமைச்சர் தயாகமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வடகிழக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத பட்சத்திலேயே  உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். 

எவ்வாறு இருப்பினும் மீண்டும் புலிகள் தோற்றம்பெற வேண்டும் என குறிப்பிட்டது வன்மையாக கணடிக்கப்பட வேண்டிய விடயம். இது குறித்து விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்றத்துக்கும் பொதுமக்களுக்கும் தகுந்த விளக்கத்தினை வழங்க வேண்டும்.

இந் நிலையில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரகை முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக குறிப்பிட்டுள்ள விடயங்கள் நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே அரசாங்கம் விஜயகலா மகேஸ்வரன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்காமல் நியூயோர்க்  டைம்ஸ்  பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றார்.