(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி )

தேர்தலை பிற்போடும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக கட்சி தலைவர்களிடையே ஒருமித்த நிலைப்பாடு எட்டப்பட்டால் தேர்தலை நடத்துவதற்கு நாம் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

அவர் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மாகாணசபை, பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பாக நாம் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துரையாடினோம். அதற்கமைவாக மாகாண சபை மற்றும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதில் எந்த  முரண்பாடுளும் இல்லை ஆனால் தேர்தல் எந்த முறைமையில் நடத்த வேண்டும் என்பதிலேயே சிக்கல் உள்ளது. 

சில கட்சிகள் புதிய முறைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். சிலர் பழைய முறைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கோருகின்றனர். இன்னும் ஒருசிலர் எந்த முறையில் தேர்தலை நடத்துவது என்ற தீர்மானத்தை இன்னும் எட்டவில்லை. 

ஆகவே ஒருமித்த நிலைப்பாடு எட்டப்படாது தேர்தலை நடத்த இயலாது. ஆகையால் விரைவில் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இதற்கான தீர்மானங்கள் முன்னெடுக்க வேண்டும். 

இந் நிலையில் அடுத்தவாரம் கூடும் கட்சி தலைவர் கூட்டத்தில் ஒருமித்த நிலைப்பாடு எட்டப்பட்டால் தேர்தலை நடத்த தயார். இல்லையேல் முரண்பட்டால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.