கல்வி அமைச்சிற்கு முன்னால் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கல்லெறித் தாக்குதலில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தமிக்க அழகப்பெரும காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் அவரது நிலைமை பாரதூரமானதில்லையென்று வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் தொழிற்சங்கங்கள் கல்வி அமைச்சிற்கு முன்னால் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்போது அவர்களுக்கும் புதிதாக நியமனங்களைப் பெற்றவர்களுக்குமிடையில் முறுகல் நிலையேற்பட்டது. இதன்போது இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.