(எம்.மனோசித்ரா)

முப்பது வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை மீண்டும் தொடர வேண்டும் என்பதற்காகவே பிரதி அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டம் என்று குறிப்பிட்டுள்ளார் என பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப் பொருள் பாவனை இல்லாதொழிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக விடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டிய அவசியமில்லை.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தானது அரசியலமைப்புக்கு மாத்திரமின்றி முழு நாட்டுற்கும் எதிரானதாகும். இவ்வாறு கருத்துக்களை முன்வைத்து மக்களை பயங்கரவாதத்திற்கு அழைத்துச் செல்லும் செயற்பாடுகளுக்கு இடளிக்ககூடாது. 

விஜயகலா மகேஸ்வரன் தான் அவ்வாறு கூறியதன் நோக்கம் அதுவல்ல என கூறினாலும் அவர் கூறிய விடயம் சட்டத்திற்கு முரணானதாகும். எனவே அவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.