(இரோஷா வேலு) 

மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் செயற்கை போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் இவரை கைதுசெய்யும் போது அவரிடமிருந்து 3.510 மில்லிகிராம் ஹெரோயினும் 84 செயற்கை போதை மாத்திரைகளையும் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந் நிலையில் குறித்த சந்தேக நபரை இன்று மாளிகாகந்தை நீதிவான் முன்னிலை ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.