கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற 33 ஆவது COEX கண்காட்சி மையத்தில் ஜூன் 14 முதல் 17 வரை நடைபெற்ற 33 ஆவது கொரிய சர்வதேச சுற்றுலா கண்காட்சியில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்திற்கு சிறந்த செயல்திறன் விருது கிடைத்துள்ளது. 

பரந்த அளவிலான நானாவித பாரம்பரிய நடன நிகழ்வுகள், இலங்கையின் கலாச்சாரத்தை விபரமாக வெளிப்படுத்தியதன் மூலம், வருகை தந்திருந்தவர்கள், தங்கள் இதயத்தின் உள்ளடக்கத்தை வண்ணமயமான நிகழ்ச்சிகளை அனுபவிக்க உதவியது. 

கொரிய மக்கள் மற்றும் பயண வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு, இலங்கை தீவின் கவர்ச்சிகரமான சுற்றுலா தலமானது என்ற விழிப்புணர்வை உருவாக்குவதற்கான பங்களிப்பை மேற்கொண்டது அத்துடன் கொரிய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கான ஊக்குதலும் அளிக்கப்பட்டது.

இலங்கையின் பிரதான கருப்பொருளான வன உயிரினம், அழகிய கண்கவர் கடற்கரைகள் மற்றும் பாரம்பரிய ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு இலங்கை ஆக்கபூர்வமானது என்ற விடயங்கள் கோடிட்டு காண்பிக்கப்பட்டது. 

உலகளாவிய ரீதியாக சுற்றுலா விடுமுறையினை களிப்பதற்கு ஏற்ற வகையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திறனை இலங்கை கொண்டுள்ளது என்பதனை இந்த கூறுகள் வெளிப்படுத்தியுள்ளன.

கொரியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயமும்ரூபவ் அமயா ரெசோட் மற்றும் ஸ்பாஸ், ஜெற்விங் ட்ரவல்ஸ், டிலுக்சி வெக்கேஷன் (பிரைவேட்) லிமிட்டட், ரோயல் ஹோல்டிங்ஸ், சீசன்ஸ் ட்ரவல்ஸ், எயிற்கன் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் (பிரைவேட்) லிமிட்டட், ஜெயா லங்கா ருவேர்ஸ் (பிரைவேட்) லிமிட்டட் மற்றும் அன்ரு த ட்ரவல் கொம்பனி (பிரைவேட்) லிமிட்டட் உட்பட பல தொழல்சார் பங்காளர்களின் முயற்சியினாலேயே SLTPB இந்த நிகழ்வுகளில் இணைந்து கொண்டது. இந்த உள்நாட்டு பயண முகவர்கள், கொரிய முகவர்களுடன் இணைந்த சந்திப்புக்கள் மூலம் அளப்பரிய பிரத்தியேகமானதும் சாதகமானதுமான பல்வேறு நன்மைகளை பெறக்கூடியதாக அமைந்தது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹர்ஷன ராஜகருணா, சுஜித் சஞ்சய பெரேரா, நூ வூங் ரே, கொரிய பேரவையின் உறுப்பனர், கொரிய குடியரசிற்கான மனிஷா குணசேகர, கொரியாவில் உள்ள இலங்கை தூதுவர், ஷின் ஜூங் மொக், தலைவர், KOFTA மற்றும் திருமதி டிலூஷி விக்கிரமசிங்க,  சந்தைப்படுத்தல் அதிகாரி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம், ஆகியோரின் சிறப்பான பிரசன்னத்தின் மத்தியில் இலங்கை காட்சியத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழா நிகழ்வு இடம்பெற்றது.

உலக புகழ்பெற்ற இலங்கை தேநீரை அருந்துவதற்கான வாய்ப்புடன், பல்வேறு சிறிய போட்டிகளில் பங்குகொண்டு பரிசுகளை பெறுவதுடன், கவர்ச்சியான வண்ணமயமான இலங்கையின் காட்சியகம்,  ஒலபொடுவ நடன அக்கடமியினால் மேற்கொள்ளப்பட்ட நானாவித நடனங்கள் கொரிய பார்வையாளர்களை ஈர்த்தது. வருகை தந்திருந்தவர்கள், தமது அடுத்த சுற்றுலா பயணத்தில் இலங்கையையும் தமது பட்டியலில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் இலங்கை குறித்து மேலதிக தகவல்களை பெறுவதில் மிகுந்த ஆர்வத்தினை வெளிப்படுதினர். இலங்கை காட்சியத்தில் அவர்கள் செலவிட்ட நேரத்தில், சிறந்த குறுகிய சுற்றுலா பயணத்திற்கான அனைத்து தகவல்களையும் அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

ஆசியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உள்ள பிரதான சுற்றுலா தலங்களைச் சேர்ந்தவர்கள் கொரியாவில் உள்ள தனித்தன்மை வாய்ந்த பாரிய நுகர்வோர் பயண அமைப்பான , KOFTA  நிகழ்வில் பங்குகொண்டனர். குறிப்பிட்ட இந்த நாடுகளைச் சேர்ந்த 70,000 பேர் இந்த நிகழ்வின் மூலம் கவரப்பட்டனர்.

இந்த கண்காட்சியில் பங்கு கொண்டதற்கும் மேலாக, இலங்கை சுற்றுலா “இலங்கை தினம்” என்ற நிகழ்வொன்றை பரபரப்பான தலைநகர் சியோலில் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரிய கலாச்சார சங்கம் மற்றும் SEOULLO முகாமைத்துவ காரியாலயத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு SEOULLO  7017 மக்நோலியா சதுக்கதில் 2018 ஜூன் 16ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்றது. இந்த களியாட்ட விழா இலங்கையின் பாரம்பரிய கலாச்சாரம், விரிவான பாரம்பரிய நடனங்கள் மற்றும் இலங்கையின் பாரம்பரிய உற்பத்திகளான இலங்கை தேயிலை,  இலங்கை பற்றிக்ஸ், இலங்கை இரத்தினக் கல் மற்றும் தங்க ஆபரணங்கள், ஸ்பா பொருட்கள் மற்றும் இலங்கை உணவு வகைகள் உள்பட பல வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் சிறார்கள் மற்றும் வயது வந்தோர் ஆகிய சகல தரப்பினரையும் கவரக்கூடிய வகையிலான விளையாட்டுக்கள் மற்றும் வினா விடை போட்டி போன்ற பொழுது போக்கு அம்சங்களும் உள்ளடக்கப்பட்டன. இலங்கை உணவு வகைகளின் ஜனரஞ்சகமான வாசனை, இலங்கை காட்சியத்திற்கு வருகை தந்தவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன் பாரம்பரிய நடன நிகழ்வுகள கவர்ச்சியினை சேர்த்ததுடன், இலங்கையில் உள்ளது போன்ற சூழலையும் ஏற்படுத்தியது.

உத்தியோகபூர்வமாக, “இலங்கை தினம்” நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹர்ஷன ராஜகருணா மற்றும் சஞ்சய பெரேரா, கொரிய குடியரசிற்கான இலங்கை தூதுவர் மனிஷா குணசேகர, கொரிய சர்வதேச பயண கண்காட்சி (KOFTA  ) தலைவர் ஷின் ஜூன்க் மொக் மற்றும் சியோல் பெருநகர் அரசாங்கத்தின் பிரதிநிதிகள், SEOULLO முகாமைத்துவ காரியாலயம் கொரிய கலாச்சார சங்கம் மற்றும் டிலுக்ஷி விக்கிரமசிங்க – சந்தைப்படுத்தும் அதிகாரி - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் என்பன இணைந்து திறந்து வைக்கப்பட்டது. இலங்கை சுற்றுலா தொழில் துறை பங்கேற்பாளர்களும் கொரிய சுற்றுலா தொழில் துறை பங்கேற்பாளர்கள் ஆகியோருக்கு இடையே முக்கிய சந்திப்புக்கள் இடம்பெற்றன.

இந்த சந்திப்புக்களின் ஊடாக வர்த்தகம் மற்றும் முதலீடு வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான கலாச்சார மற்றும் மத உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் SLTPB கொரியாவின் ஜொக்யேசா ஆலயத்தின் பிரதான குரு அதி வணக்கத்திற்கு உரிய ஜீஹயூனுக்கு மற்றும் சியோலில் உள்ள நான்கு இலங்கை பௌத்த ஆலயங்களின் பிரதம குருமாருக்கும் பாராட்டு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. கொரியாவில் SLTPB  இனால் மேற்கொள்ளப்பட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகள் காரணமாக, மேலதிகமான கொரிய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்வர், குறிப்பாக இரு நாடுகளின் கலாச்சாரம் மற்றும் மதபின்னணி ஒத்ததாக உள்ள காரணத்துடன் அதன் பன்முகத்தன்மை வாய்ந்த இனப்பண்பாட்டை கொண்டுள்ளதனாலும் கொரிய சுற்றுலா பயணிகளின் இலங்கைகக்கான விஜயம் அதிகரிக்கும்.