களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை கைதுசெய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 29 ஆம் திகதி களுவாஞ்சிக்குடி பகுதியில் வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் குறித்த வீட்டின் உரிமையாளர‍ை அச்சுறுத்தி 23 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களையும் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந் நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த களுவாஞ்சிக்குடி பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை கைதுசெய்துள்ளனர்.