எரிபொருள் பெற்றுக் கொண்டமைக்காக கனியவள கூட்டுத் ஸ்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய 5 மில்லியன் டொலர் நிலுவைத் தொகையை அடுத்த வாரத்திற்குள் செலுத்த ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க எதிர்வரும் புதன்கிழமைக்குள் பணம் கிடைக்காவிடின் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என விடுத்த அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகளுக்கு,

"புதனுக்குள் பணம் கிடைக்காவிடின் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்"