கடைசி அணியாக காலிறுதியில் கால்பதித்தது இங்கிலாந்து

Published By: Vishnu

04 Jul, 2018 | 10:37 AM
image

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் கொலம்பியாவை 4 க்கு 3 என்ற பெனல்டி அடிப்படையில் வெற்றிகொண்ட இங்கிலாந்து கடைசி அணியாக கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

மொஸ்கொ ஸ்பார்ட்டக் விளையாட்டரங்கில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி முன்னோடி கால் இறுதிப் போட்டி மேலதிக நேர நிறைவிலும் 1 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் வெற்றி அணி பெனல்டி மூலம் தீர்மானிக்கப்பட்டது.

பெனல்டிகளில் இரண்டை கோல்காப்பாளர் ஜோர்டான் பிக்போர்ட் தடுத்ததன் மூலம் இங்கிலாந்து வெற்றிபெற்றது.

இந்த வெற்றி மூலம் 52 வருடங்களின் பின்னர் மீண்டும் உலக சம்பியனாகும் இங்கிலாந்தின் கனவு நனவாவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

போட்டி ஆரம்பித்ததும் கொலம்பிய எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இங்கிலாந்து விளையாடியது. அணித் தலைவர் ஹெரி கேன், ரஹீம் ஸ்டேர்லிங், ஜெஸ்ஸே லிங்கார்ட் ஆகியோர் நேர்த்தியான பந்த பரிமாற்றங்கள் மூலம் முன்னோக்கி நகர்ந்தவாறு இருந்தனர். ஆனால் கொலம்பியாவின் ஆளுக்கு ஆள் (மென் டூ மேன்) வியூகமும் முட்டி மோதும் வியூகமும் அவர்களைக் கட்டுப்படுத்திய வண்ணம் இருந்தது. கொலம்பிய வீரர்கள் சிலர் சூட்சுமமாக இங்கிலாந்து வீரர்களைத் தள்ளியமை, தலையால் முட்டியமை போன்ற சம்பவங்களை மத்தியஸ்தரால்கூட கண்டறிவது சிரமமாக இருந்தது. ஒரு சந்தர்ப்த்தில் இங்கிலாந்து வீரர் ஒருவரின் முகத்தில் கொலம்பிய வீரர் வில்மார் பெரியோஸ் தனது தலையால் முட்டியபோதுகூட உதவி மத்தியஸ்தரின் தயவுடனேயே தாக்குதல் நடத்திய வீரருக்கு மத்தியஸ்தர் மஞ்சள் அட்டை எச்சரிக்கை விடுத்தார்.

கொலம்பியாவைப் பொறுத்தமட்டில் அதன் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரொட்றிகூஸ் அணியில் இடம்பெறாதது அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. முன்கள வீரர்கள் எதிர்தாக்குதலில் ஈடுபட்டபோதிலும் இங்கிலாந்துக்கு அச்சுறுத்துல் விடுக்கும் வகையில் அமையவில்லை.

இடைவேளையின் பின்னர் இங்கிலாந்து அணியினர் நிதானம் கலந்த வேகத்துடன் விளையாடி கோல் போடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிய வண்ணம் இருந்தனர்.

போட்டியின் 54ஆவது நிமிடத்தில் ஹெரி கேனை கொலம்பிய வீரர் சன்ச்செஸ் முரணான வகையில் வீழ்த்தியதால் இங்கிலாந்துக்கு பெனல்டி வழங்கப்பட்டது. தொடரந்து இங்கிலாந்து வீரர் ஹெண்டர்சன் அநாவசியமாக முரண்பட்டதில் மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்.

57ஆவது நிமிடத்தில் பெனல்டியை இலக்கு தவாறாமல் கோலினுள் புகுத்திய இங்கிலாந்து அணித் தலைவர் ஹெரி கேன், தனது அணியை முன்னிலையில் இட்டு நம்பிக்கை ஊட்டினார்.

நேரஞ் செல்லசெல்ல கொலம்பிய வீரர்களின் எதிர்த்தாடும் ஆற்றல் அதிகரிக்கத் தொடங்கியது. போட்டியின் கடைசி 15 நிமிடங்கள் கடுமையாக பொராடிய கொலம்பியா, உபாதையீடு நேரத்தின் 3ஆவ நிமிடத்தில் (93 நி.) யெரி மினா மூலம் கோல் நிலையை சமப்படுத்தியது. 

இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் இரண்டு அணிகளும் வெற்றி கோலுககான முயற்யிசியில் இறங்கியபோதிலும் இறுதியில் பெனல்டி முறையிலேயே வெற்றி அணி தீர்மானிக்கப்பட்டது. 

கொலம்பியா வீரர்களான மத்தேயஸ் யூரிபே (நான்காவது), கார்லோஸ் பெக்கா (ஐந்தாவது) ஆகியோரின் பெனல்டிகளை இங்கிலாந்து கோல்காப்பாளர் ஜோர்டான் பிக்போர்ட் தடுத்து நிறுத்தினார். அணித் தலைவர் ரடாமெல் பெல்கோ, யுவான் குவாடார்டோ, லூயிஸ் மியூரியல் ஆகியோர் பெனல்டிகளை நேர்த்தியாக கோலினுள் புகுத்தினர்.

இங்கிலாந்து வீரர் ஜோர்டான் ஹெண்டர்சனின் (மூன்றாவது) பெனல்டியை கொலம்பிய கோல்காப்பாளர் டேவிட் ஒஸ்பினா தடுத்தார். அணித் தலைவர் ஹெரி கேன், மேரியஸ் ரஷ்போர்ட், கீரன் ட்ரிப்பர், எரிக் டயர் ஆகீயோர் பெனல்டிகளை முறையாகப் பயன்படுத்தினர்.

முன்னோடி கால் இறுதிகள் நேற்றுடன் நிறைவுபெற்றன. கால் இறுதிகள் வெள்ளி, சனி தினங்களில் நடைபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35