“மாணவர்கள் மொட்டையடிக்கப்பட்டமைக்கான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறவில்லை”

Published By: Priyatharshan

04 Jul, 2018 | 09:26 AM
image

வவுனியா, யாழ் வளாகத்தின் இரண்டாம் வருட விஞ்ஞான பீட மாணவர்களால்  கடந்த 21-06-2018 அன்று கனிஸ்ட மாணவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து முறைப்பாடுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என வவுனியா யாழ். வளாகத்தின் முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

இச்சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஏற்று விரிவான விசாரணை ஒன்றையும் ஆரம்பித்துள்ளோம்.

பகிடிவதை குறித்து ஊடகங்களில் வெளிவரும் செய்திகளால் பல்கலைக்கழகத்திற்கு அபகீர்த்தி ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பகிடிவதை குறித்து வளாகத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ முறைப்பாடுகள் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை.

பகிடிவதை குறித்து தகவல்கள் கிடைக்கப்பெற்று விசாரணைகள் மேற்கொள்ளப்படும்போது மாணவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை அதன் காரணமாக பகிடிவதை சட்டங்கள் இருந்தும் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் பிரயோக விஞ்ஞான பீட அவையின் தீர்மானத்தின் பிரகாரம் மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32