(நா.தனுஜா)

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தொடர்பில் எமது பத்­தி­ரிகை வெளி­யிட்ட செய்தி தொடர்பில் ஏதேனும் தெளி­வு­ப­டுத்­தல்கள் தேவைப்­படின் எமது பத்­தி­ரி­கையின் உயர்­மட்ட பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­களைத் தொடர்­பு­கொள்ள முடியும். அதை­வி­டுத்து இலங்­கையின் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பகி­ரங்க அச்­சு­றுத்தல் விடுக்க வேண்டாம் என "நியூயோர்க் டைம்ஸ்" சர்­வ­தேச நாளி­தழின் ஆசி­ரியர் மைக்கல் ஸ்லெக்மன் தெரி­வித்­துள்ளார். 

அம்­பாந்­தோட்டை துறை­முக விவ­காரம் தொடர்பில் அண்­மையில்"நியூயோர்க் டைம்ஸ்" நாளிதழ்  செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது. அவ்­வி­டயம் தொடர்பில் மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­தி­ருந்த கருத்து குறித்து "நியூயோர்க் டைம்ஸ்" நாளி­தழின் ஆசி­ரியர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  

அவ்­வ­றிக்­கையில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இணைந்து நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றின் போது எமது பத்­தி­ரி­கை­யால் கடந்த ஜுன் மாதம் 26 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட அம்­பாந்­தோட்டை துறை­முக விவ­காரம் தொடர்­பான செய்­திக்­கான தகவல் பங்­க­ளிப்­பினை மேற்­கொண்ட இலங்கை ஊட­க­வி­ய­லா­ளர்கள் இரு­வ­ருக்கு பகி­ரங்க அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ளனர். 

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான இவ்­வா­றான அச்­சு­றுத்தல் நட­வ­டிக்­கைகள் ஏற்­கப்­பட முடி­யா­த­வை­யாகும். இத்­த­கைய செயற்­பா­டுகள் ஊடக சுதந்­தி­ரத்­துக்கு தடை­யாக அமை­வ­துடன் ஊட­கங்­களை "அமை­திப்­ப­டுத்தும்" வித­மா­கவும் அமைந்­துள்­ளன. அத்­தோடு செய்­தியை அறிந்­து­கொள்­வதில் இலங்கை மக்கள் கொண்­டுள்ள உரி­மை­யினை மறு­த­லிப்­ப­தா­கவும் உள்­ளது. 

இலங்­கையின் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எமது நிறு­வ­னத்­துக்கோ அல்­லது வேறு நிறு­வ­னத்­துக்கோ எவ்­வித அச்­சு­றுத்­தல் ­களுமின்றி சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­வ­தை உரிய அதி­கா­ர­ச­பைகள் உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்று எதிர்­பார்க்­கின்றோம். 

மேலும் எமது பத்­தி­ரி­கையில் வெளி­யான செய்தி தொடர்பில் ஏதேனும் முரண்பாடு கள் இருப்பின் "நியூ யோர்க் டைம்ஸ்" பத்தி ரிகையின் உயர்மட்ட ஆசிரியர்களைத் தொடர்புகொள்ள முடியும். அதனை விடு த்து இலங்கை ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் ஏற்கப்பட முடியாதவையாகும் என்று தெரிவித்துள் ளார்.