(ஆர்.யசி)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை  கட்டியெழுப்ப முடியும். ஏனைய தலைவர்களை விடவும் ரணிலுக்கு பொருளாதார அறிவு அதிகமாக உள்ளது என  அமைச்சர்  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவத்தார்.  

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததில் எமது பங்கு அதிகமாகும். ஆனால் மனித உரிமைகளை நாம் மீறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

தேசிய அரசாங்கம் முன்னெடுத்துவரும் பொருளாதார செயற்பாடுகள் மற்றும் இராணுவம் மீதான விசாரணை நகர்வுகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.