(ஆர்.யசி )

கூட்டு எதிரணியினர் ஹிட்லர் வேண்டும் என கூறுவதைப் போன்றதே இராஜாங்க அமைச்சர்  விஜயகலா மகேஸ்வரன் பிரபாகரன் வேண்டும் எனக்  கேட்கின்றார். இவர்கள் இருவரது கருத்துகளிலும் வித்தியாசம் இல்லை என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்துக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்தோ அல்லது அரசாங்கத்தின் கருத்தோ அல்ல. இது அவரது கருத்து மட்டுமேயாகும். அவர் முன்வைத்த கருத்தினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். 

எனினும் இந்த சம்பவத்தையடுத்து நான் அவருடன் தொலைபேசியில் உரையாற்றினேன். வடக்கின் தற்போதைய நிலைமைகள் மற்றும் சூழலை பார்க்கையில் என் மனதில் ஏற்பட்ட தாக்கமே தான் அவ்வாறு பேசக் காரணம் என அவர் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப்புலிகள் வேண்டும், பிரபாகரன் வேண்டும் என்று கூறுவதும், கூட்டு எதிரணியினர் ஹிட்லர் வேண்டும் என கூறுவதும் ஒரே கருத்துதான். இவர்கள் இருவரும் ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளனர் என்றார்.