(தினுஷா)

விடுதலை புலிகளின் இயக்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என்று சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகார  பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் குறிப்பிட்டமையை ஐக்கிய தேசிய கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன் இப்பிரச்சாரம் தொடர்பில் அவரே  உத்தியோகப்பூர்வ விளக்கத்தினை வழங்குவார் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் விடுதலை புலிகளின் இயக்கம் மீண்டும் தலைதோங்க வேண்டும் என்று பிரதியமைச்சர்  விஜயகலா  மகேஷ்வரன் குறிப்பிட்டுள்ளமையானது தற்போது நாட்டில் பாரிய மாறுப்பட்ட கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறு இருப்பினும் இவரது கருத்துக்களை ஐ.தே.க. வன்மையாக கண்டிக்கின்றது.  

விஜகலா மகேஸ்வரன் இந்தக் கருத்தினை எந்த நோக்கத்துக்காக குறிப்பிட்டார் என்ற விடயம் யாரும் அறியாததே. ஆகவே அவரே இது தொடர்பான விளக்கத்தை வழங்க‍ வேண்டும். அதன் பின்னர் இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். 

மேலும் ஐக்கிய தேசிய கட்சி தேசிய அரசாங்கத்தில் ஆளுங்கட்சியாக செயற்பட்டு தூய்மையான ஆட்சியினை முன்னெடுத்து செல்கின்றது. தெற்கில் ஹிட்டலரையும், வடக்கில் பிரபாகரனையும் உருவாக்கும் நோக்கம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஒருபோதும் கிடையாது என்றார்.