நியூயோர்க் டைம்ஸ் செய்தி சட்டரீதியாக ஆராயப்பட வேண்டும்  - ஐ.தே.க

Published By: Daya

03 Jul, 2018 | 02:55 PM
image

(எம்.மனோசித்ரா)

நியூயோர்க் டைம்ஸ் ஊடகம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்து வெளியிட்டுள்ள செய்தி தொடர்பிலான உண்மைத்தன்மை சட்ட ரீதியாக ஆராயப்பட வேண்டும். அது குறித்து பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இந்துநில் துஷார அமரசேன தெரிவித்தார். 

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற குழு கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

பிரபல்யமான வெளிநாட்டு ஊடகமொன்றில் இலங்கை செய்தி வெளியாகியுள்ளமை ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஒரு விடயமாகும். எமது நாட்டிலிருந்து தகவல்கள் வழங்கப்படாமல் அவர்களால் செய்தியை வெளியிட்டிருக்க முடியாது. எனவே இதனை சாதாரண விடயமாக கருத முடியாது. 

மஹிந்த தரப்பினர் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் குறிப்பிடுகின்றனர். அப்படியென்றால் அவர்கள் அதனை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் அந்த ஊடகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் வெறும் வாய் வார்த்தைகளிலேயே உண்மையை மறைக்க முயற்சிக்கின்றனர். 

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் மஹிந்ததரப்பினரால் அரசாங்கத்திற்கு பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. எனினும் அதனை அவர்களால் வெற்றிகொள்ள முடியாமல் போனது. தற்போது அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் வெளிவரும் போது அதனை பொய்யாக்க முயற்சிக்கின்றனர். 

எனினும் இது எளிதில் விடக் கூடிய சாதாரண விடமல்ல. இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02