கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் பயனாளிகளுக்கு மாதாந்த உலர் உணவுப் பொருட்களை வழங்கும் நிகழ்வு நல்லூர் வடக்கில் அமைந்துள்ள அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்றது. 

இதன் போது பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட நம் தாயக சமூக நல அமைப்பு திட்டத்தின் கனடா மற்றும் இலங்காக்கான இணைப்பாளர் லோகன் ராசையா உள்ளிட்டவர்கள் மாதாந்த உலர் உணவுப் பொருட்களை வழங்கினர்.