கிளிநொச்சியில் அண்மையில் சிறுத்தை ஒன்றை சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைதான 10 பேருக்கும் விளக்கமறியல்  நீடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் அண்மையில் சிறுத்தையொன்று தாக்கிதாகக் கூறி குறித்த சிறுத்தையை ஊர் மக்கள் சேர்ந்து அடித்து கொலை செய்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சமூக ஆர்வளர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து குறித்த கொலையுடன் தொடர்புடையோரை கைது செய்ய கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களை ஆதாரமாகக் கொண்டு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரை பொரலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்தனர்.

இந்நிலையில் மேற்குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில்

குறித்த 10 பேரையும் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் மயில்வாகனம் கிரேசியன்  உத்தரவிட்டுள்ளார்