எதிர்வரும் காலங்களில் சர்வதேக கிரிக்கெட் போட்டிகளின் போது பந்தை சேதப்படுத்துவோருக்கு எதிரான உட்சபட்டச தண்டனையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

அந்த வகையில் இவ்வாறான குற்றச்சாட்டில் அடையாளம் காணப்படும் வீரருக்கு 6 டெஸ்ட் போட்டிகளில் அல்லது 12 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்க தீர்மானித்துள்ளதாகவும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. 

அயர்லாந்தின் டப்ளின் நகரில் நேற்று இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாக குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.