மன்னார் மறைமாவட்டத்தில் பல்வேறு மனித நேயப் பணிகளை ஆற்றி வரும் கறிற்றாஸ்-வாழ்வுதயம் தனது 'உதவிக்கரம்' பிரிவின் ஊடாக இரத்ததான முகாமொன்றை இம்மாதம் 5 ஆம் திகதி வியாழக்கிழமை மன்னாரில் நடத்தவுள்ளதாக மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி. ம. ஜெயபாலன் அடிகளார் தெரிவித்தார்.

இம்மாதம் 5 ஆம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை இல-9, வயல் வீதி, மன்னார் என்னும் முகவரியில் அமைந்துள்ள 'உதவிக்கரம்' நிலையத்தில் இரத்ததான முகாம் இடம் பெறவுள்ளது.

 குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு இரத்ததானம் செய்ய விரும்பும் ஆண் , பெண் இருபாலாரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்க முடியும் என  மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி. ம.ஜெயபாலன் அடிகளார்  தெரிவித்தார்.