உண­வ­கத்தில் தனக்கு பரி­மா­றப்­பட்ட உணவு குறித்து ஏற்­பட்ட அதி­ருப்­தியால் சின­ம­டைந்த பெண் வாடிக்­கை­யாளர் ஒருவர்  அந்த உண­வ­கத்தின் உரி­மை­யா­ளரின் காதைக் கடித்துத்  துண்­டாக்­கிய  விப­ரீத சம்­பவம்  அமெ­­ரிக்க மிக்­சிக்கன் மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

ஜேட் அன்­டர்ஸன் (24  வயது)   என்ற மேற்­படி பெண் வாடிக்­கை­யாளர் சின­ம­டைந்து ஆங்­கி­லத்தில் கூச்­ச­லி­டவும் அங்கு வந்த  அந்த சீன உண­வ­கத்தின் உரி­மை­யா­ளரின் மக­னான  சுமார் 11  வயது மதிக்­கத்­தக்க சிறுவன்  அவர்   கூறு­வதை தனது தந்­தைக்கு மொழி பெயர்த்துக் கூற முயற்­சித்­துள்ளான். 

இதன்­போது  ஜேட் அவனை நிலத்தில் கீழே தள்ளி  விடவும்  அங்­கி­ருந்த  அந்த சிறு­வனின் தாயார்  அவரை பல­வந்­த­மாக  அந்த உண­வ­கத்­தி­லி­ருந்து வெ ளியேற்றும் முயற்­சியில்  ஈடு­பட்டார். இதன்­போது ஜேட் அந்தப் பெண்­ணையும் தாக்க முற்பட்டார்.

 இந்­நி­லையில்  தனது மனை­வியை  ஜேட்டின் தாக்­கு­த­லி­லி­ருந்து காப்­பாற்ற   உண­வ­கத்தின் உரி­மை­யாளர்  அங்கு வரவும் ஜேட் சினம் உச்ச கட்டமடைந்த நிலையில் அந்த உண­வக உரி­மை­யா­ளரின் காதை கடித்துத் துண்­டாக்­கி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து  உண­வக உரி­மை­யாளர்  காதில்  குருதி வழிந்­தோட மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டார். அதே­ச­மயம் ஜேட் பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்டு மாகொம் பிராந்­திய சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.