ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணியின் அனுபவ வீரரும் தலைசிறந்த மிட்பீல்டருமான இனியஸ்டா, சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அந்த வகையில் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நொக்கவுட் சுற்றில் ஸ்பெயின் - ரஷ்யா அணிகள் மோதின. இப் போட்டியில் ரஷ்ய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. 

ஸ்பெயின் அணியின் பொன்னான காலக்கட்டங்களில் அதி சிறந்த வீரராக அறியப்பட்ட இனியஸ்டா, கடந்த 2010 ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் கோல் அடித்து ஸ்பெய்ன் அணி சம்பயியன் மகுடம் சூட உறுதுணைாயக இருந்தவர் இவர்.

ஆனால் அவரது திறமை நேற்றுமுன்தினம் ரஷ்யா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பெயின் அணியின் தோல்வியை தடுத்து நிறுத்தவில்லை இதன் காரணமாகவே அவர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்திருக்கின்றார்.

34 வயதான இனியஸ்டா, ஸ்பெய்ன் அணிக்காக 131 ஆட்டங்களில் பங்கேற்று 13 கோல்கள் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.