இந்திய அரசின் நிதியுதவியில் கிளிநொச்சி செல்வாநகர் அதக பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

9.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டடத்தை யாழ். இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரன் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.

நீண்ட காலமாக போதிய வகுப்பறை கட்டட வசதிகள் இன்றி காணப்பட்ட குறித்த பாடசாலைக்கு இதுவொரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ்,  கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ. வேழமாலிகிதன், அயற்பாடசாலைகளின் அதிபர்கள்,  பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .