ஒருநாள் போட்டிகளில் இந்திய அணித்தலைவரிற்கு பந்து வீசுவதை விட கடினமான சவால் வேறு ஏதாவது உள்ளதா என்ற கேள்விக்கு இது மிகச்சிறந்த கேள்வி இதற்கு என்னிடம் பதில் இல்லை என இங்கிலாந்து ஒருநாள் அணியின் தலைவர் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இந்திய இங்கிலாந்து அணிகளிற்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய துணைகண்ட அணிகளிற்கு எதிராக விளையாடும்போது அது வித்தியாசமான சவாலாக காணப்படும் என தெரிவித்துள்ள மோர்கன் இங்கிலாந்து அவுஸ்திரேலிய தென்னாபிரிக்கா போன்ற அணிகள் சுழற்பந்து ரிவேர்ஸ்விங் போன்ற சவால்களை சந்திக்கவேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நாங்கள் இந்த வருடம் நிறையபோட்டிகளில் விளையாடியுள்ளோம் இதன் காரணமாக இந்த சவாலை எதிர்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியா போன்ற திறமைவாய்ந்த அணிக்கு எதிராக விளையாடும்போது சுழற்பந்து வீச்சாளர்கள் குறித்து மாத்திரம் கவனம் செலுத்தமுடியாது அப்படி சுழற்பந்து வீச்சாளர்கள் மீது மாத்திரம் கவனம் செலுத்தினால் வேகப்பந்துவீச்சாளர்களிற்கு அது சாதகமாகிவிடும் அவர்கள் விக்கெட்களை வீழ்த்திவிடுவார்கள் எனவும் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வலுவான அணி சுழற்பந்து வீச்சாளர்களிற்கு அப்பால் அவர்களிடம் வேறு திறமையான அம்சங்களும் உள்ளன அனுபவமும் அவர்களிடம் உள்ளது இதன் காரணமாக இங்கிலாந்து அணி கடும் சவாலை எதிர்கொள்ளும் எனவும் மோர்கன் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணித்தலைவரிற்கு பந்து வீசுவதை விட கடினமான சவால் வேறு ஏதாவது உள்ளதா என்ற கேள்விக்கு இது மிகச்சிறந்த கேள்வி இதற்கு என்னிடம் பதில் இல்லை என இங்கிலாந்து அணி தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கோலியை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் இங்கிலாந்து அணியிடம் உள்ளதாகவும் மோர்கன் குறிப்பிட்டுள்ளார்.