ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பொலிஸ் அதிகாரியாக பரத்தும், அவருக்கு ஜோடியாக அன்ஷீத்தல் நடிக்கும் ‘காளிதாஸ்’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் தயாரிப்பு மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. 

பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை உரிமையை டிரெண்ட் மியூசிக் கைப்பற்றி இருப்பதாகவும், படத்தின் டீசர்  ஜூலை 6-ஆம் திகதி வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.