இலங்கை கிரிக்கெட் கவுன்சிலின்  தேர்தலை அடுத்து வரும் ஆறு மாதங்களுக்குள் நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியுள்ளது.

நேற்று நடைபெற்ற ஐ.சி.சியின் வருடாந்த மாநட்டின் போதே குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அறிவுறுத்தலுக்கமைய ஆறு மாதங்களுக்குள் தேர்தலை நடாத்த தவறும் பட்சத்தில் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை தொடர்பாக மீள்பரிசீலனை செய்யப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.