சர்­வ­தேச கிரிக்கெட் சம்­மே­ளத்தின் "ஹோல் ஒவ் பேம்" கௌரவப் பட்­டி­யலில் ராகுல் டிராவிட், ரிக்கி பொண்­டிங், கிளைர் டெய்லர் ஆகியோர் இடம் பிடித்­துள்ளனர்.

 

கிரிக்­கெட்டில் அதிக ஓட்­டங்கள், அதிக விக்­கெட்­டுக்கள் மற்றும் பல்வேறு சாதனைகள் படைத்­த­வர்­களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர்களை ஐ.சி.சி.யின் அதி­யுச்ச கௌர­வ­மான "ஹோல் ஒவ் பேம்" என்ற பட்­டி­யலில் இணைத்து கௌர­வித்து வரு­கி­றது. 

இப் பட்­டி­யலில் இலங்கை அணியின் முர­ளி­தரன் இணைக்­கப்­பட்டு கடந்த ஆண்டு அவ­ருக்­கான விருதை ஐ.சி.சி. வழங்­கி­யி­ருந்­தது.

அதேபோல் இந்­திய கிரிக்­கெட்டில் ஏற்­க­னவே சாதனை படைத்­தி­ருந்த சுனில் கவாஸ்கர், பிஷன்சிங் பேடி, கபில் தேவ், அனில் கும்ப்ளே ஆகியோர் இடம்­பி­டித்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் இந்த வருடம் மூவரை இந்த கௌரவப் பட்­டி­யலில் ஐ.சி.சி. இணைத்­துள்­ளது. இதில் ஒருவர் இந்­திய கிரிக்கெட் அணியின் தடுப்­புச்­சுவர் என்று அழைக்­கப்­பட்ட ராகுல் டிராவிட் ஆவார். மற்ற இரு­வரும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் மற்றும் இங்­கி­லாந்து மகளிர் அணி வீராங்கனை கிளைர் டெய்லர் ஆகியோராவர்.