தாய்லாந்து நாட்டின் தாம் லுவாங் குகையினுள் கடந்த 09 நாட்க்களாக சிக்கிக் கொண்ட 12 சிறுவர்கள் உட்பட 13 பேரும் உயிருடன் இருப்பதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

அந்த வகையில் இவர்கள் கடந்த 23 ஆம் திகதி தாய்லாந்தின் வடக்கு பகுதியிலுள்ள தாம் லுவாங் மலைப் பகுதிக்கு சென்றனர் அங்கு மழை தொடர்ந்த காரணத்தினால் குறித்த 13 பேரும் அப் பகுதியிலுள்ள குகை ஒன்றிற்குள் நுழைந்தனர். 

அதன் பின்னர் அவர்கள் எட்டு நாட்களாகியும் திரும்பில்லை இந் நிலையில் அவர்களைத் தேடும் பணி கடந்த 9 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. குகைக்குள் இருக்கும் நீரை வெளியேற்றும் நடவடிக்கை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சீனா, மியான்மர், அமெரிக்கா என பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரம் பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்போது தாய்லாந்தில் வெள்ளம் பாய்ந்த குகைக்குள் தங்களது பயிற்சியாளருடன் சிக்கிக் கொண்ட 12 கால்பந்து வீரர்கள் உட்பட 13 பேரும் 9 நாட்களுக்கு பின்பு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நரோன்க்சாக் ஒசாடானகோர்ன், சியாங் ராய் ஆளுநர் தெரிவிக்கையில், 

மீட்புப் படையினர் பட்டயா கடற்கரையை ஒட்டிய பகுதியை அடைந்தனர். அங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 400 அடி ஆழத்தில் மேடான பகுதி ஒன்றில் 13 பேரும் உயிருடன் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளது என்றும் அவர்களை மீட்தற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.