பிலிப்பைன்சில் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துகின்றார் என குற்றம்சாட்டப்பட்ட மேயர் ஒருவர் சினைப்பர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

டனாவுவான் நகர மேயர் அன்டோனியோ கலிலி என்பவரே சினைப்பர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இவர் நிகழ்வொன்றில் கொடியேற்றிக்கொண்டிருந்தவேளை ஒரேயொரு சினைப்பர் குண்டு இவரை கொலைசெய்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட் சினைப்பர் தாக்குதல் இடம்பெறுவதை காண்பிக்கும் வீடியோவொன்றும் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட வீடியோவில் மேயர் அரசாங்க உத்தியோகத்தர்களுடன் இணைந்து கொடியை ஏற்றுவதையும் தேசிய கீதமிசைப்பதையும் காணமுடிகின்றது.

அதன் பின்னர் ஒரேயொரு துப்பாக்கிகுண்டு சத்தம் கேட்பதையும் பெண்ணொருவர் அலறுவதையும் அவதானிக்க முடிகின்றது,

இந்த தாக்குதலின் பின்னர் மேயரின் பாதுகாப்பு பிரிவினர் பதில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் இதன் காரணமாக அப்பகுதியில் மேலும் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வீடியோவை பதிவு செய்த அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் எங்கிருந்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது என்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளிகளிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக மேயரிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 நெஞ்சை துப்பாக்கி ரவை சரியாக பதம்பார்த்தது, அவர் உயிர்தப்பமாட்டார் என தெரிந்ததும் நான் அங்கிருந்து ஓடினேன் என துணைமேயர் தெரிவித்துள்ளார்.