ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிரேஸிலுக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான உலகக் கிண்ண முன்னோடி கால் இறுதிப் போட்டி  (16 அணிகள் இரண்டாம் சுற்று நொக் அவுட்) சமாரா எரினா விளையாட்டரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

முதலாம் சுற்றில் பெரும் சிரமத்துக்கு மத்தியிலான பெறுபேறுகளை ஈட்டிய இந்த இரண்டு அணிகளில் பிரேஸில் சற்று பலம்வாய்ந்த அணியாக தென்படுகின்றது. எனினும் மெக்சிகோ அணி இப் போட்டியை இலகுவில் நலுவ விடாது என நம்பப்படுகின்றது.

பொதுவாக நொக் அவுட் போட்டிகள் விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என்பதால் இந்தப் போட்டியும் கடைசிவரை சுவாரஸ்யமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே மூன்று முன்னாள் உலக சம்பியன்கள் வெளியேறியுள்ள நிலையில் மற்றொரு முன்னாள் சம்பியன் பிரான்ஸுடன் இணைவதற்கு பிரேஸில் கடுமையாக முயற்சிக்கவேண்டிவரும். இவ்வணிக்கு மார்செலோ, தியாகோ சில்வா, மிரண்டா ஆகியோர் இதுவரை லீ்க் சுற்றில் அணித் தலைவர்களாக விளையாடியுள்ளனர்.

இந்த இரண்டு அணிகளும் இதற்கு முன்னர் சந்தித்துக்கொண்ட நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளில் 3இல் பிரேஸில் வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி கோல்களின்றி முடிவடைந்தது. ஒரு சந்தர்பதிலேனும் மெக்சிகோவுக்கு ஒரு கோலைத்தானும் பிரேஸில் கொடுக்கவில்லை.

(என்.வீ.ஏ.)

அணிகள் விபரம்

பிரேஸில்: அலிசன், பாஞ்ஞர், தியாகோ சில்வா, மிரண்டா, பிலிப்பே லூயிஸ், கெசெமிரோ பௌலின்ஹோ, வில்லியன், பிலிப்பே கூட்டின்ஹோ, நேமார், கேப்றியல் ஜீசஸ்.

மெக்சிகோ: கிலேமோ ஒக்கோஆ, மிகெல் லேயன், ஹியூகொ அயாலா, கார்லொஸ் சல்சிடோ, ஜீசஸ் கலார்டோ, ஹெக்டர் ஹெரேராஃ, ஜோநதன் டொஸ் சன்டோஸ், அண்ட்ரெஸ் குவார்டாடோ (அணித் தலைவர்), கார்லோஸ் வேலா, ஜேவியர் ஹேர்னெண்டெஸ், ஹேர்விங் லொஸானோ.